பொங்கல் பண்டிகையையொட்டி நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்


பொங்கல் பண்டிகையையொட்டி நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கரூர்

சிறப்பு பஸ்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), 14-ந்தேதி ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி எளிதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரையும் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து டவுன் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊருக்கு திரும்ப...

மேலும் நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்தும்,

கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story