செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
x

செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் 25-ந்தேதி நடக்கிறது.

செங்கல்பட்டு

கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் 15.9.2023 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.


Next Story