சோனியா நலம் பெற, ராகுல் நீண்ட ஆயுள் பெற 116 மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமம்..!


சோனியா நலம் பெற, ராகுல் நீண்ட ஆயுள் பெற 116 மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமம்..!
x

தாராபுரத்தில் சோனியா காந்தி உடல் நலம் பெறவும், ராகுல் காந்தி நீண்ட ஆயுள் பெறவும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு யாகங்கள் நடத்தினர்.

திருப்பூர்,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று தன்னுடைய 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பெற வேண்டியும் எம்.பி ராகுல் காந்தியின் பிறந்தநாளை ஒட்டியும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு யாகங்கள் நடத்தினர்.

தாராபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர் 116 வகையான சிறப்பு மூலிகை திரவியங்களைக் கொண்டு ஆயுள் விருத்தி ஹோமங்கள் நடத்தி முருகனை வழிபட்டனர். சோனியா காந்தி விரைவில் உடல் நலம் பெறவும் ராகுல்காந்தியின் நீண்ட ஆயுளுக்காகவும் காங்கிரசார் மனமுருக வேண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.


Next Story