மாணவர்கள்-மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்


மாணவர்கள்-மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்
x

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டையில் மாணவர்கள்-மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டையில் மாணவர்கள்-மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் வருகிற 17-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.இந்த முகாம்கள் தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியிலும், கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையிலும், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை மங்களமாதா மக்கள் மன்றத்திலும் நடக்கிறது. கல்விக்கடன் பெற விரும்பும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் ஆதார் அட்டை நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான்கார்டு நகல், கல்வி பயில்வதற்கான சான்று, கல்வி கட்டண விவர சான்று, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும்.

பயன் பெறலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் எனில் அவர்களுடைய அனைத்து நகல்களுடன் வர வேண்டும்.இந்த முகாம்களில் உரிய ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாம்களில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 2-ம் கட்டமாக வருகிற 28-ந் தேதி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்.



Next Story