பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Oct 2023 7:30 PM GMT (Updated: 14 Oct 2023 7:30 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

புரட்டாசி கடைசி சனிக்கிழையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரிவரதராஜ பெருமாள்

புரட்டாசி மாதம் இந்துக்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாலை 5 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார்.

சுதர்சன ஹோமம்

இதேபோன்று டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேக மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் காலை 6 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

அலங்கார பூஜை

இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை உச்சியில் உள்ள ருக்குமணி சத்யபாமா சமேத நந்தகோபால்சாமி கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story