தமிழகம் முழுவதும் நாளை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்: அண்ணாமலை பேட்டி


தமிழகம் முழுவதும் நாளை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்: அண்ணாமலை பேட்டி
x

கோப்புப்படம் 

கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானத்தை பாஜக நடத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து, இது வெறும் வதந்தி என்றும், பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கொடுப்பதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டோம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானத்தை பாஜக நடத்தும்." இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story