தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்ட்ரல் - நெல்லை இடையே (நவ.8, 15, 22) ஆகிய 3 நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது (06051) மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நெல்லை - சென்ட்ரல் இடையே (நவ.9, 16, 23) ஆகிய 3 நாட்களில் நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06052) மறுநாள் அதிகாலை 3.45க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


Next Story