செக்கந்திராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, தெலுங்கான மாநிலம் செக்கந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு 5 சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, தெலுங்கான மாநிலம் செக்கந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு 5 சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்.07121/ 07129/ 07131/ 07133/ 07141) டிசம்பர் 8,10,17,24,31-ந்தேதி மற்றும் ஜனவரி 7,12,14,19-ந்தேதிகளில் செக்கந்திராபத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம் நோக்கி புறப்படும்.
இதேபோல மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து ரெயில்கள் இயக்கபடும்.இதேபோல, விஜயவாடா மற்றும் நர்சாபூர் இருந்து கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story