ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு


ஓணம் பண்டிகையை முன்னிட்டு  சிறப்பு ரெயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 3-ந்தேதி இரவு 8.25 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண். 06044) சென்னை எழும்பூரை அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு வந்தடையும். இதேபோல, மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 4-ந்தேதி மதியம் 4.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06043) அடுத்த நாள் அதிகாலை 3.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்குகான முன்பதிவு நாளை (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு திறக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளது.


Next Story