கேரளாவுக்கு, சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்


கேரளாவுக்கு, சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
x

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:-

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க ஆந்திர மாநிலம் நரசபூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி நரசபூர்-கோட்டயம் சிறப்பு ரெயில் (07119) வருகிற 18, 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) நரசபூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம்-நரசபூர் சிறப்பு ரெயில் (07120) வருகிற 19, 26 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 10.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 10.32 மணிக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி வழியாக மறுநாள் மாலை 4 மணிக்கு நரசபூர் சென்றடையும்.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story