சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06080) இன்று (சனிக்கிழமை) கொல்லம் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 1.45 மணிக்கு புறப்பட்டு காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டையம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.15 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் 12.20 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும், இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் -கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06079) வருகிற 17-ந் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.47 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதே போல கொல்லம் - பெங்களூரு சிறப்பு ெரயில் (வண்டி எண் 06083) கொல்லத்திலிருந்து நாளை அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டையம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 1.27 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் வழியாக மாலை 6.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும், மேற்கண்ட தகவலை சேலம் ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.