புனித மரியன்னை பேராலய தேர்பவனி


புனித மரியன்னை பேராலய தேர்பவனி
x

புனித மரியன்னை பேராலய தேர்பவனி நடந்தது.

திருச்சி

திருச்சி மேலப்புதூரில் பிரசித்தி பெற்ற புனித மரியன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய பங்கு பெருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்னையின் திருக்கொடியை திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி ஏற்றிவைத்து சிறப்பு திருப்பலியை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து தினமும் மாலையில் சிறப்பு மறையுரையுடன் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை மறைமாவட்ட அருள்பணியாளர் அந்துவான் தலைமையில் திருவிழா திருப்பலியும், திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலையில் ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மரியன்னையின் சொரூபம் வைத்து மந்திரிக்கப்பட்டு தேர்பவனி தொடங்கியது. கான்வென்ட்ரோடு, மார்சிங்பேட்டை, பீமநகர் ஹீபர் சாலை மேம்பாலம், பாலக்கரை வேர்ஹவுஸ் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை தேர் வந்தடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு, கொடியிறக்கம் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்பின் விருந்து அளிக்கப்பட்டது. தேர்பவனியில் பேராலய அதிபர் சகாயராஜ், உதவி பங்குத்தந்தை ஜான்கிறிஸ்டோபர் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story