நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு


நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
x

பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளார்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் என்பவர், சிறிய குற்ற வழக்குகளில் கைதானவர்களின் பற்களை பிடுங்கியதாகவும், கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்லச் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.

சுமார் 14-க்கும் மேற்பட்டவர்களின் பற்களை அவர் பிடுங்கியதாக புகார் எழுந்ததையடுத்து, பல்வீர் சிங்கை கட்டாய காத்திருப்பில் வைத்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலன் விசாரணைப்பிரிவு ஐ.ஜி.க்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



Next Story