கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்கள்-கட்டுப்படுத்த பயணிகள் கோரிக்கை


கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்கள்-கட்டுப்படுத்த பயணிகள் கோரிக்கை
x

கரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் ரெயில் நிலையம்

கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில் சேவை உள்ளது. 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கரூர் ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் சென்று வருகின்றன. இதனால் கரூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கரூர் ரெயில் நிலையத்தில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. குறிப்பாக ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர், பயணிகள் இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் சுற்றிவருகின்றன.

கோரிக்கை

இதனால் கரூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் அங்கு வரும் பயணிகளை கடிக்க தெருநாய்கள் பாய்கின்றன. இதனால் ரெயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். தெருநாய்கள் பயணிகளின் இருக்கைகள் அருகே வந்து படுத்து தூங்குவதால், பயணிகள் இருக்கையில் அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றன. எனவே, தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story