மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - மின்வாரியம் எச்சரிக்கை


மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - மின்வாரியம் எச்சரிக்கை
x

மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

சென்னை,

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. அத்துடன், 100 யூனிட் இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மின் சேவை இணைப்புகளை வழங்குவதற்கு அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கோருவதும், வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து, இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், லஞ்சம் குறித்து ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story