துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 120 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளராக ரேவதி என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை ரேவதி பணிக்கு வந்தவர்களின் விவரங்களை பதிவு செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்கள் அவரவர் பணிக்கு திரும்பினர். ஆனால் 2 பேர் மேற்பார்வையாளர் ரேவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ரேவதியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து 25-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story