சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை


சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
x

பி.டெக் படித்து வந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை,

இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையம் திகழ்கிறது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில், தொடர்ந்து முதல் இடம் பிடித்து வரும் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் 2-ம் ஆண்டு பி.டெக் படித்து வந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற்ய் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தங்கியிருந்த விடுதி அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பி.எச்.டி. மாணவர் சச்சின் குமார் ஜெயின் (வயது 32) என்பவர் வேளச்சேரியில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக பிப்ரவரி மாதம் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்டீபன் சன்னி என்பவரும், மார்ச் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த பி.டெக் மாணவர் வைபு புஷ்பக ஸ்ரீசாய் (வயது 20) என்பவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story