"மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்" - யோகி ஆதித்யநாத் அறிவுரை
மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
"மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவர் தொடங்கியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும்.
செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள். மாநில அரசின் அப்யுதயா திட்டம் மாணவர்களை அவர்கள் எழுதத் திட்டமிட்டுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story