10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற மாநகராட்சி

10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற மாநகராட்சி
x

10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு சென்னை மாநகராட்சி அழைத்து சென்றுள்ளது.

சென்னை,

10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு சென்னை மாநகராட்சி அழைத்து சென்றுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அழைத்து செல்ல முடியாத சூழலில், இந்தாண்டு சண்டிகர், சிம்லா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு 40 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 50 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.

பெரம்பூர் ரெயில் நிலையத்திலிருந்து சுற்றுலா சென்ற அவர்களை மேயர் பிரியா, இனிப்புகள், உணவுகள், உள்ளிட்டவைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

1 More update

Next Story