சிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை


சிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை
x

மாணவ, மாணவிகள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம், மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சி கழகம் இணைந்து நடத்திய மாபெரும் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் 500 பேர் பங்கேற்றனர்.

இதனை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story