பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு


பொய் வழக்கு பதிவு செய்த  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்  மனித உரிமை ஆணையம் உத்தரவு
x

பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பொம்பூரை சேர்ந்தவர் மோகன். பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த இவரை கடந்த 2019-ம் ஆண்டு மயிலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் முருகப்பன் ஆகியோர் புகார் மனு வாங்கிக்கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீஸ்காரர்கள் வெங்கடேசன், அறிவுநிதி ஆகியோர் சேர்ந்து கல்விமணி, முருகப்பன் ஆகியோரை கைது செய்தனர். எனவே இதுதொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்பட 3 பேர் மீதும் நடவடிக்கை கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குனர் வக்கீல் ஹென்றிடிபேன் உள்ளிட்டோர், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை முடிந்த நிலையில் கல்விமணி, முருகப்பன் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் ஒரு மாத காலத்துக்குள் கல்விமணி, முருகப்பன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் இருந்து வசூலிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story