லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்புகளால் போக்குவரத்து பாதிப்பு


லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்புகளால் போக்குவரத்து பாதிப்பு
x

லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்புகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

நொய்யல் வழியாக புகழூர் நோக்கி கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆலமரத்து மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகள் சாலையில் விழுந்தது. அப்போது லாரிக்கு பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டு நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கரும்புகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டது.


Next Story