கையில் வேலுடன் இபிஎஸ் - 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு


கையில் வேலுடன் இபிஎஸ் - சூரசம்ஹாரம் ஸ்டார்ட் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட  போஸ்டர்களால் பரபரப்பு
x

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

சேலம்:

அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்களில் பரபரப்பான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

குறிப்பாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த போஸ்டர்களில் எடப்பாடி பழனிசாமி கிரீடம் அணிந்து, கையில் வேல் ஏந்தி, கழுத்தில் மாலை அணிந்து இருப்பது போல் உள்ளது. மேலும் 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, எதிரியை அழிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கையில் வேல் எடுத்து உள்ளார். அதாவது முருகப்பெருமான், கையில் வேலுடன், சூரனை வதம் செய்து வெற்றி பெற்றது போல எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார். அதனை குறிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி உள்ளோம் என்று கூறினர். இந்த நிலையில் சில இடங்களில் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story