தமிழக பாஜக செயலாளர் கைது - சென்னையில் பரபரப்பு


தமிழக பாஜக செயலாளர் கைது - சென்னையில் பரபரப்பு
x

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்த பாஜகவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கைது சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் தமிழக பாஜக தலைவர் கேட்டறிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Next Story