தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு


தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு
x

மன்னார்குடி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி அருகே இடையர் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய 27-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் அமிர்தஜெயம் வரவேற்றார். மாநாட்டின் கொடியை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் ஏற்றி வைத்தார். தியாகிகளின் நினைவு சின்னத்தை மூத்த தலைவர் மாலா பாண்டியன் திறந்து வைத்தார். மாநாட்டினை சங்கத்தின் மாநில பொது செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தொடங்கி வைத்து பேசினார்.தற்போது அறிவித்துள்ள காப்பீடு திட்ட இழப்பீடு அறிவிப்பை மறு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும். 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு கடந்த சம்பா பாதிப்பிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உள்ளதை கணக்கில் கொண்டு இந்த இழப்பீட்டை மறு ஆய்வு செய்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி நூதன முறையில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.


Next Story