10 சதவீத இடஒதுக்கீடு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


10 சதவீத இடஒதுக்கீடு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம்

10 சதவீத இடஒதுக்கீடு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ பன்னீர்செல்வம், "மாநில அரசு செயல்பாடுகளுக்கு கவர்னர் இடையூறாக இருந்தார் என கூறுவதற்கு ஆதாரம் இல்லை. கவர்னர் இந்திய அரசியல் சட்டப்படி அவருக்குரிய கடமைகளை செய்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான். புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் கடமை எனக்கு உள்ளது. பொருளாதார இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.


Next Story