அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Aug 2022 12:05 PM IST (Updated: 24 Aug 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

கோவை,

கோவை ஈச்சனாரியில் தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ரூ.272 கோடியில் முடிவுற்ற 229 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர்.

இதையடுத்து விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:

*கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.

*கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

*கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

* கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு.

*அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது.

*தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் உற்றுநோக்கி வருகிறார்கள்.

1 More update

Next Story