அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்


அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
x

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்' என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story