"தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்"- அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருநெல்வேலி,
திருநெல்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது;
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உரிமை இருந்தும் ஏன் நடத்தவில்லை.. தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story