தமிழ் பழக்க வழக்கங்கள் குறித்து கிண்டல் - வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து


தமிழ் பழக்க வழக்கங்கள் குறித்து கிண்டல் - வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து
x

தமிழ் பழக்க வழக்கங்கள் குறித்து வடமாநில இளைஞர், சங்கரிடம் அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே தனியார் உணவக ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டு அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சூட்டுமாசி என்ற இளைஞரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் பழக்க வழக்கங்கள் குறித்து வடமாநில இளைஞர், சங்கரிடம் அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் வெங்காயம் வெட்டும் கத்தியால் வடமாநில இளைஞரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story