'அரசின் திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணி ஆசிரியர்களிடம் தான் உள்ளது' - அமைச்சர் பொன்முடி


அரசின் திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணி ஆசிரியர்களிடம் தான் உள்ளது - அமைச்சர் பொன்முடி
x

தமிழ்நாடு அரசின் திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணி ஆசிரியர்களிடம் தான் உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழக உதவி மையத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான ஏ.யு.டி.யின் 75-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு அரசின் திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணி ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது என்று தெரிவித்தார். இந்த விழாவில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story