கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 9:42 PM IST (Updated: 15 Jun 2023 3:05 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், சோளிங்கர் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும், மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து, 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story