காஞ்சீபுரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜவுளி கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது


காஞ்சீபுரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜவுளி கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது
x

காஞ்சீபுரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜவுளி கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 52). ஜவுளி கடை உரிமையாளர். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் கணவன், மனைவி போல வசித்து வந்தார். அந்த பெண்ணுடன் 12-ம் வகுப்பு மாணவியான 17 வயதான அவரது தங்கையும் வசித்து வந்தார். இந்த நிலையில் விவேகானந்தன் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவியின் அக்காள் காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விவேகானந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Next Story