தம்பி அண்ணாமலை நேர்மையான அதிகாரி - சீமான் பேட்டி
நான் அறிந்தவரையில் அண்ணாமலை நேர்மையானவர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் கூறியதாவது;
"தமிழ்நாட்டில் பாஜக ஊழல் செய்யவில்லை என்பதை ஏற்கலாம். அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களை அவர்கள் ஆளுகின்றனர். இந்தியாவையும் ஆளுகின்றனர். அங்கெல்லாம் ஊழல் இல்லை என்று கூறிவிட முடியாது.
என்னை பொறுத்தவரை நான் அறிந்தவரையில் அண்ணாமலை நேர்மையானவர். அவர் இருக்கின்ற கட்சி நேர்மையானதா, ஊழலற்ற கட்சியா என்றால் அது கிடையாது.
அதிகாரத்திற்கு வந்த பிறகு அதேபோல நேர்மையான, ஊழல் இல்லாமல் இருந்தால் அது சாதனை". இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story