டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி


டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
x

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கீழ மைக்கேல்பட்டி அன்னை நகரை சேர்ந்தவர் ஜொரால்டுராஜ் (வயது 45). இவருடைய மகன் ஜோன் (11). கடந்த 7-ந் தேதி கரூரில் நடைபெற்ற காதணி விழாவிற்கு ஜொரால்டுராஜ் தனது மகனுடன் சென்றுள்ளார். பின்னர் 10-ந் தேதி ஜொரால்டுராஜ் விவசாய பயன்பாட்டிற்கு பழைய டிராக்டரை வாங்கி கொண்டு தனது மகனுடன் டிராக்டரில் சென்று கொண்டு இருந்தார். டிராக்டரை கரூர் சங்கரம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (44) என்பவர் ஓட்டி சென்றார். விளாங்குடி- தா.பழூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடை மீது ஏறியபோது டிராக்டர் குலுங்கியது. இதில் கீழே தவறி விழுந்ததில் ேஜான் படுகாயம் அடைந்தான். இதையடுத்து அவைன மீட்டு அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவன் ஜோன் ஏற்கனவே இறந்தத தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story