அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை தொடர்ந்த வழக்கு வாபஸ்


அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை தொடர்ந்த வழக்கு வாபஸ்
x

நடிகை சாந்தினி தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், அவர் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகை சாந்தினி தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்திருந்தால் என்னவாகும்? என்று நடிகை தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story