அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணை


அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணை
x

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழன்) சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story