செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கும் மத்திய அரசு


செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கும் மத்திய அரசு
x

செம்பரம்பாக்கம் ஏரியை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

காஞ்சிபுரம்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி. இங்கு நீர் தேக்கி வைக்கப்பட்டு தினந்தோறும் சென்னை மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியிலில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்ட போது பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பொது பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து சீராக வைத்து கொண்டு மழைநீர் அதிகரிக்கும் போது பாதிப்பு ஏற்படாத வகையில் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

வெள்ள பாதிப்புக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் 3 இடங்களில் நவீன கருவிகளை வைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியின் வியூ பாயிண்ட் என்று சொல்லக்கூடிய பகுதியில் மழையின் அளவை கண்காணிக்க கருவியும், அதன் அருகிலேயே ஏரியில் நீரின் ஆழம் மற்றும் அதில் ஏதாவது ரசாயன மற்றும் கழிவுகள் கலக்கிறதா என்பதை கண்டறியவும், ஏரிக்கு எவ்வளவு நீர் வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்காணிப்பது என 3 இடங்களில் 3 கருவிகளை வைத்து மத்திய அரசு நேரடியாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக கருவிகளை மட்டும் ஏரியில் வைத்துவிட்டு இருந்த இடத்தில் இருந்து ஏரியின் நிலவரங்களை கண்காணிக்கிறது. இந்த கருவிகளை வைப்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் மட்டும் வைத்து விட்டு நேரடியாக அந்த கருவிகள் மூலம் அவர்களே கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் 2015 -ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு மத்திய அரசு நேரடியாக ஆங்காங்கே கருவிகளை வைத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நீர் வரத்து உள்ளிட்டவற்றை நேரடியாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story