நெல்லை: மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை


நெல்லை: மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை
x

மானூர் அருகே குடும்ப தகராறில் தந்தை தன் மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள சேதிராயன் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் மகாராஜன் (வயது 24). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை, மேலும் குடிப்பழக்கம் உண்டு. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததால் இவரது மனைவி ஒரு வருடம் முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். மகாராஜன் குடிபோதையில் அடிக்கடி தனது தந்தை ஆறுமுகம் வயது 52 என்பவரை அடிப்பாராம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது அப்பா ஆறுமுகத்தை அடிக்க சென்று தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகம் குடித்துவிட்டு வந்து நேற்று இரவு 12 மணி அளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகனை இரும்பு கம்பியால் தலையில் சரமாரி அடித்து கொன்று விட்டார். தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி ஆனந்தராஜ் மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி சப் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து இறந்த மகராஜன் உடலை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story