வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது


வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது
x

சொத்து தகராறில் வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

செம்பட்டிவிடுதி முருகராஜ் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இதே கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (45). இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரன் குளிர்பான பாட்டிலால் சரவணன் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சரவணனை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story