கொருக்குப்பேட்டையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்


கொருக்குப்பேட்டையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
x

கொருக்குப்பேட்டையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்து போஜராஜன் நகர், சீனிவாசபுரம், கொல்லாபுரி நகர் என நகரங்களாக பிரித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்துக்கு பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பட்டா வழங்க சாத்தியம் இல்லை என தெரிகிறது.

இந்தநிலையில் தங்களுக்கு பட்டா வழங்ககோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் செய்ய வந்தனர். அவர்களை வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த இடம் ரெயில்வேக்கு சொந்தமானது என்பதால் பட்டா வழங்க சாத்தியம் இல்லை. நீங்கள் சாலை மறியல் போராட்டம் செய்வதைவிட முறையாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு மனு செய்யுங்கள் என இன்ஸ்பெக்டர் தவமணி அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.


Next Story