எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு


எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
x

கோப்புப்படம் 

நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகிற 31-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 19.1.2024 அன்று, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 19.1.2024 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 31.1.2024 - புதன் கிழமை அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story