பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்


பேரறிவாளன் விடுதலையை கண்டித்து    காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்
x

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

அறவழி போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர்அலுவலகம் எதிரே அறவழி போராட்டம் நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்ஆர்.டி.வி. சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் பாபு சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன கோஷம்

போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது என கண்டன கோஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், விஜயரங்கன், நாராயணசாமி, குப்பன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் அலி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமச்சந்திரன், விஸ்வநாதன், ராஜேஷ், சேகர், காஜாமொய்தீன், வெற்றி வேல், பேரூராட்சி தலைவர்கள் திருக்கோவிலூர் கதிர்வேல், வளவனூர் அண்ணாமலை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், இளைஞர்காங்கிரஸ் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனம் காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. தலைவர் ராமமூர்த்தி, நகர துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி நூதன முறையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனித உரிமை துறை தலைவர் சக்திவேல், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வரதராஜ், பொதுச் செயலாளர் பொன் ராஜா, நகர செயலாளர் அஜிஸ், விஜயன், கனகராஜ், ஜெய் கணேஷ், அர்ச்சுனன், இளைஞர் காங்கிரஸ் அஜித், சாமிநாதன், நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு நகர தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட செயலாளர் குமரேசன், நிர்வாகிகள் ராஜேந்திரன், திருநீலகண்டன், மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் லோகேஷ், நகர செயலாளர் அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story