தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரி
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3,410 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,278 கிலோவாக குறைந்தது. நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.657-ம், குறைந்தபட்சமாக ரூ.221-ம், சராசரியாக ரூ.552 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.18 லட்சத்து 10 ஆயிரத்து 124 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story