சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Sep 2023 12:48 PM GMT (Updated: 8 Sep 2023 2:33 PM GMT)

சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னையில் கேரளா மீடியா அகாடமி, சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 'The Changing Mediascape' என்ற புத்தகம் மற்றும் ஆவணப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறும்போது, "ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாள அகாடமி முக்கிய பங்காற்றுகிறது. தற்போது ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும்.

நாம் அனைவரும் திராவிட மொழி என்னும் ஒரே மொழி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. சமூக நீதியை சிதைக்க பார்க்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடும் கேரளாவும் ரெட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்தியாவிற்கு விடியலை தர வேண்டும்" என்று கூறினார்.


Next Story