மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு


மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு
x

மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருடப்பட்டது.

செங்கல்பட்டு

வீட்டின் பூட்டு உடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா. கணவரை இழந்த இவர் வெளியூரில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள்தான் வீட்டில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள தனனுடைய மாமா வீட்டில் தூங்கி விட்டனர். நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை- பணம் திருட்டு

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. மகள்களின் திருமணத்திற்காக பரிமளா நகை, பணத்தை சேமித்து வைத்திருந்தார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

1 More update

Next Story