தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகள் திருட்டு


தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகள் திருட்டு
x

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து தொழிற்சாலையின் முதுநிலை மேலாளர் முருகன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து தனியார் தொழிற்சாலையில் பேட்டரி திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.


Next Story