டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர்களின் செல்போன்கள் திருட்டு


டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர்களின் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 22 May 2022 10:54 AM IST (Updated: 22 May 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவொற்றியூரில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர்களின் செல்போன்கள், பணமும் திருடு போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே உள்ள ஜெயகோபால் கரோயா அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வடசென்னை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்பதால் தேர்வு எழுதிய 400 பேர் தங்களது செல்போன் மற்றும் உடைமைகளை பள்ளியின் உட்புறமாக உள்ள அரங்கம் ஒன்றில் வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். தேர்வு எழுதிய பின்னர் வெளியில் வந்து பார்க்கும்போது பலரது செல்பபோன்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் இதுவரை 4 பேர் மட்டும் செல்போன் திருட்டு போனதாக புகார் அளித்து உள்ளனர். மேலும் பலரது செல்போன் , பணமும் திருடு போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story