சென்னை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சென்னை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

சென்னை மாநகராட்சிக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் கவனத்துடன் செய்து வருகிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

குடிநீர் வழங்கல் துறை சார்பில் 11.98 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

2015-ல் பெய்த மழை பாதிப்பில் இருந்து சென்னை மீள 10 நாட்கள் ஆன நிலையில், கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இரண்டே நாட்களில் சென்னை மீண்டு வந்துள்ளது. தற்போது சென்னை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை என்பதே இல்லை.

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி, தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் கவனத்துடன் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story