தமிழகத்தில் பாஜகவுக்கு பணியும் அரசு இல்லை - திருமாவளவன்


தமிழகத்தில் பாஜகவுக்கு பணியும் அரசு இல்லை - திருமாவளவன்
x

தமிழகத்தில் பாஜகவுக்கு பணிகிற அரசு இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தை பிற மாநிலங்களைப் போல் நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

"தமிழகத்தில் பாஜகவுக்குப் பணிகிற அரசு இல்லை. அவர்களுக்கு கூழைக் கும்பிடு போடக்கூடிய ஆட்சி நிர்வாகம் இங்கே இல்லை. அவர்கள் பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டையும் பார்க்கிறார்கள். இங்கு நடப்பது பெரியார் அரசு; அண்ணா அரசு; கலைஞர் அரசு என்பதை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்கள்.

பிற மாநிலங்களில் செய்த சேட்டைகளை இங்கே செய்யலாம் என்று கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை காலம் சொல்லும்" என்று கூறினார்.


Next Story